திருவாரூரில் 14வது இளையோர் ஆண்கள் ஹாக்கி உலகக் கோப்பை "வெற்றி கோப்பை" – மாணவர்களின் உற்சாக வரவேற்பு. - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 18 November 2025

திருவாரூரில் 14வது இளையோர் ஆண்கள் ஹாக்கி உலகக் கோப்பை "வெற்றி கோப்பை" – மாணவர்களின் உற்சாக வரவேற்பு.


திருவாரூர், நவம்பர் 18:

தமிழ்நாட்டில் நடைபெற உள்ள 14வது இளையோர் ஆண்கள் ஹாக்கி உலகக் கோப்பை போட்டிக்கான தயாரிப்புகளை முன்னிட்டு, வெற்றி கோப்பையை எடுத்துச் செல்லும் மாநிலளாவிய சுற்றுப்பயணம் இன்று திருவாரூரை வந்தடைந்தது.

இந்த உலகக் கோப்பை ஹாக்கி போட்டி வரும் நவம்பர் 28 முதல் டிசம்பர் 10 வரை சென்னை மற்றும் மதுரையில் நடைபெற உள்ளது. இதற்கான வெற்றி கோப்பையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் கடந்த 5ஆம் தேதி அறிமுகப்படுத்தியதை தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்று வருகிறது.

மாணவர்கள் & விளையாட்டு வீரர்கள் உற்சாக வரவேற்பு

திருவாரூருக்கு வந்த வெற்றி கோப்பையை, மாணவ–மாணவிகள், விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் என பலர் உற்சாகமாக வரவேற்றனர். சிறப்பாக, மாணவர்கள் நிகழ்த்திய சிலம்பாட்டங்கள், வெற்றி கோப்பையை சுற்றி நடத்தப்பட்ட விழிப்புணர்வு ஊர்வலத்தில் காட்சியளித்து பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது.


நகரம் முழுவதும் விழிப்புணர்வு ஊர்வலம்

திருவாரூர் ரயில் நிலையத்தில் தொடங்கிய ஊர்வலம், பழைய பேருந்து நிலையம், பணகல் சாலை, தெற்கு வீதி வழியாக நகர மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி சென்று, வடபாதிமங்கலம் சோமசுந்தரம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நிறைவடைந்தது.


கோப்பை சின்னத்தை அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்த கலெக்டர்

இந்நிகழ்வை தொடர்ந்து, 14வது ஆண்கள் ஹாக்கி உலகக் கோப்பை போட்டியின் வெற்றி கோப்பை சின்னமான “காங்கேயனை” திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் அவர்கள் திறந்து வைத்து பார்வைக்கு திறந்துவைத்தார்.

திருவாரூர் முழுவதும் விளையாட்டுப் போட்டிகளின் மேன்மையை சுட்டிக்காட்டும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்வு, மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் ஹாக்கி மீதான ஆர்வத்தை அதிகரித்தது.

No comments:

Post a Comment

Post Top Ad